தேனி மாவட்டத்தில் நடந்த ஒரு உண்மை சம்பவம், `கால் கொலுசு' என்ற பெயரில் படமாகிறது. காதலின் வலி காதலர்களுக்கு மட்டுமல்ல... காண்பவர்களுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற கருவை அடிப்படையாக வைத்து இந்த படம் தயாராகிறது.
இதில் கதாநாயகனாக நடித்து, படத்தை டைரக்டு செய்கிறார், சதீஷ். இவருக்கு ஜோடியாக கேரளாவை சேர்ந்த `பிளஸ்-2' மாணவி நீது நடிக்கிறார். இருவரும் கொட்டும் மழையில் உதட்டுடன் உதடு சேர்த்து முத்தம் கொடுக்கும் காட்சியை சமீபத்தில் படமாக்கினார்கள்.
தேனி மாவட்டத்தில் வளர்ந்து வரும் இந்த படத்துக்கு சந்தோஷ்-சஞ்சீவி ஆகிய இரட்டையர்கள் இசையமைக்கிறார்கள். ஸ்ரீஜித் ஒளிப்பதிவு செய்கிறார். கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், டைரக்ஷன்: சதீஷ். எஸ். பீட்ஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் படம் தயாராகி வருகிறது.