Recommendations
Recent Activity
Stories Tag Cloud
Search Tag Cloud
No Data Available..
முகப் பொலிவிற்கு சில குறிப்புக்கள்
ஒரு மேஜைக்கரண்டி பால்பவுடர், ஒரு தோல் நீக்கிய வெள்ளரிக்காய், ஒரு தேக்கரண்டி தயிர் ஆகியவற்றை மிக்ஸியில் நன்கு அடித்து, பசையை முகத்தில் தடவவும். 15 - 20 நிமிடம் கழித்து இளம் சூடான நீரில் கழுவினால் முகம் பொலிவடையும்.

ஒரு முட்டையை நன்கு அடித்து
, அதனுடன் ஒரு தேக்கரண்டி தேன், ஒரு தேக்கரண்டி பாதாம் எண்ணை கலந்து உலர்ந்த சருமம் உள்ளவர்கள் முகத்தில் தடவினால், சருமம் மிருதுவாகும்.
 
அரைத் தேக்கரண்டி தேன், அரைத் தேக்கரண்டி எலுமிச்சைச் சாறு மற்றும் 3 மேஜைக் கரண்டி தயிருடன் ஒரு முட்டை வெள்ளை சேர்த்து அடிக்கவும். முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து இளம் சூடான நீரில் முகம் கழுவவும்.