முகப்பரு தொல்லையா?
Chennai
வியாழக்கிழமை,
பெப்ரவரி 18,
10:40 AM IST
0
கருத்துக்கள்
சந்தன பவுடர் கடைகளில் கிடைக்கும்
. அதனைப் பன்னீரில் குழைத்து முகத்தில் பூசி 15 நிமிடங்கள் கழித்து கழுவி விட வேண்டும். மூன்று மாதங்கள் இவ்வாறு செய்து வந்தால் முகத்தில் பருத் தொல்லையே இருக்காது. முகத்தில் பருக்கள் பெருமளவு உருவாகி விட்டால் அதற்கு வெளியே கொடுக்கும் சிகிச்சை மட்டுமின்றி உள்ளேயும் சிகிச்சை அவசியமாகும்.
எவரிடமும் ஆலோசனை கேட்காது சுய சிகிச்சை என்ற பெயரில் முகத்தை வடுவாக்கிவிடும் பெண்களும் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். முகப்பருவைக் கிள்ளிவிடுவது, முரண்பாடான அழகு சாதனங்களைப் பயன்படுத்துவது எலுமிச்சைப் பழத்தை முகத்தில் அழுத்தித் தேய்ப்பது போன்றவைகளால் முகத்தை ரணமாக்கிவிடுகிறார்கள். சிலருக்கு ரணமாக்கப்பட்ட முகப்பருக்கள் ஒரே இடத்தில் இருந்தால் முகத்தில் பெரிய குளி விழுவதை அவதானிக்க முடியும்.
0
கருத்துக்கள்