உங்கள் சருமத்தை அழகாக்கும் உணவுகள்
சிலருக்கு செயற்கையான கீரீம் பயன்படுத்தி உடல் அழகாக்க பிடிக்காது அவங்களுக்கு இதோ சில உணவுகள் மூலமே அழகாக்க சில உணவு குறிப்புகள்:
 
உடலின் வெளி அழகுக்கும், உள் ஆரோக்கியத்துக்கும் மிகவும் முக்கியம் கீரை எல்லா வைகயான கீரையும் அதிகம் சாப்பிடலாம். குறிப்பாக வெந்தயக்கீரை, பசலைக்கீரை,முருங்கை கீரைகளில் அதிகமாக இரும்பு சத்து மற்றும் ஜிங்க் சத்து இருக்கு. இந்த கீரைகளுடன் விட்டமீன் சி சத்துள்ள உணவுகள் சேர்த்தும் சாப்பிடும் பொழுது இன்னும் அதிகமான சத்துக்கள் கிடைக்கும் இதன் மூலம் கண்களுக்கு கருவளையம் குறையும், முகத்தில் பருக்கள் வருவது குறையும்.

வருண்ட சருமம் உள்ளவர்கள்:

அதிக வருண்ட சருமம் உள்ளவர்கள் உணவில் கொழுப்பு நிறைந்த உணவுகள்
(உடல் நலனுக்கு ஏற்ப) உணவில் சேர்த்துக்கொள்ளவும், ஆலீவ் ஆயீல், எள் எண்ணெய், கடலை எண்ணெய், நெய் போன்றவைகளை உணவில் சேர்த்துக்கொள்ளவும்.