தொடர்புடைய
பரிந்துரைக்கபட்டது
அதிகம்
வாசிக்கபட்டது
நயன்தாராவுடன் நடனம்: பிரபுதேவாவுக்கு மனைவி ரம்லத் கண்டனம்
சென்னை, பிப். 8-
 
நயன்தாராவுடன் ஆடிய பிரபுதேவாவுக்கு மனைவி ரம்லத் கண்டனம் தெரிவித்தார். பிரபுதேவா - நயன்தாரா காதல் தீவிரமடைந்துள்ளது. இருவரும் ஓட்டல்களில் சேர்ந்து தங்குகிறார்கள்.
 
நயன்தாராவை திருமணம் செய்ய பிரபுதேவா முயற்சிக்கிறார். மனைவி ரம்லத்திடம் இதற்கு அனுமதி கேட்டார். அவர் ஒப்புக்கொள்ளவில்லை. இத் திருமணத்துக்கு சம்மதிக்கவே மாட்டேன் என்று பிடிவாதமாக மறுத்து வருகிறார். ஆனாலும் இருவரின் ரகசிய சந்திப்புகள் தொடர்கிறது.
 
பிரபுதேவா- நயன்தாரா காதல் விஷயத்தை ரம்லத் சில மாதங்களுக்கு முன் பகிரங்கபடுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. நயன்தாரா என் வாழ்க்கையில் குறுக்கிடுகிறார். தன் கணவரை விட்டு விடும்படி கேட்டுக்கொள்கிறேன். அவரை எங்கு பார்த்தாலும் அடிப்பேன் என்றெல்லாம் பேட்டி அளித்தார். நயன்தாராவுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பியும் மிரட்டினார்.
 
இதையடுத்து நயன்தாரா சென்னைக்கு ரகசியமாக வந்து போனார். ஐதராபாத்தில் மட்டும் இருவரும் சந்தித்து கொண்டனர். அங்கு நடந்த ஒரு விழாவுக்கு ஜோடியாக கலந்து கொண்டார்கள்.
 
தற்போது சென்னையில் நேற்று முன்தினம் திரையுலகம் சார்பில் நடந்த விழாவில் பிரபுதேவாவும் நயன்தாராவும் ஜோடியாக நடனம் ஆடி பரபரப்பு ஏற்படுத்தினார்கள். இருவரும் ஆடுவது ரகசியமாக வைக்கப்பட்டு இருந்தது. கடைசி நிகழ்ச்சியாக மேடையில் தோன்றினார்கள். இருவரையும் மேடையில் பார்த்தவர்கள் சில நொடிகள், அதிர்ச்சியானார்கள். மேற்கத்திய இசைக்கு இருவரும் கைகோர்த்தபடி ஆடி கலக்கினர். இவ்வளவுகளே பரத்துக்கு பிறகு இருவரும் துணிச்சலாக சேர்ந்து ஆடியது வியப்பை ஏற்படுத்தியது.
 
இருவரும் நடனம் ஆடியது ரம்லத்துக்கு ஆத்திரத்தை மூட்டியுள்ளது. பிரபு தேவாவை கடுமையாக கண்டித்தார். இருவருக்கும் தகராறு நடப்பதாக நெருக்கமானவர்கள் தெரிவித்தனர். நயன்தாராவிடமும் சண்டை போட ரம்லத் முடிவு செய்துள்ளார். அவர் எங்கு தங்குகிறார் என்று முகவரியை விசாரித்து வருகிறார்.