தைரியம்
வக்கீல் தேவன் மகன் குமரன். தோழி கார்த்திகாவை அமைச்சர் ராதாரவி மகன் ரியாஸ்கான் கடத்துகிறார். ரியாஸையும், அவர் கூட்டாளிகளையும் அடித்து நொறுக்கி கார்த்திகாவை மீட்கிறார்.
 
இந்த மோதலில் ரவுடிகள் சாகின்றனர். ரியாஸ்கான் கோமாவில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படுகிறார். குமரனை போலீஸ் தேடுகிறது.
 
மலேசியாவில் இருந்து அண்ணனை பார்க்க வரும் தீபுக்கும், குமரனுக்கும் காதல் மலர்கிறது. இருவருக்கும் பெற்றோர் திருமணம் நிச்சயிக்கின்றனர். அப்போது அண்ணனை தாக்கியது குமரன் என்பது தெரிய அதிர்ச்சி. திருமணம் நிற்கிறது. இருவரும் சேர்ந்தார்களா? என்பது கிளைமாக்ஸ்.
 
காதல், குடும்பம், சண்டையில் காட்சிகள் விறுவிறுப்பாய் நகர்கின்றன. குமரன் ஆக்ஷன் ஹீரோவாய் அவதாரம் எடுத்துள்ளார்.
 
ரியாஸ்கானுடன் மோதியதில் ரவுடிகள் பலியான தகவல் டெலிவிஷனில் செய்தியாக வர அடுத்து என்ன நடக்குமோ? என்ற எதிர்பார்ப்பு.
 
கோவிலில் தீபுவிடம் வம்பு செய்யும் ரவுடிகளை நொறுக்குவது அனல். கிளைமாக்ஸ் சண்டை ஹாலிவுட் மிரட்டல்.
 
திருமண மண்டபத்தில் ரியாஸ்கானுக்கு நினைவு திரும்புவதும் உண்மை கொலையாளிகள் பற்றிய பிளாஸ்பேக்கும் திருப்பங்கள்.

கார்த்திகா காதலில் தோற்று நிற்கிறார். தீபு அழகான காதலி. திரைக்கதையில் இன்னும் அழுத்தம் சேர்த்து இருக்கலாம். மோகன்சிங், சுரேந்தர் இசையில் பாடல்கள் இனிமை. அடிதடி படமாக உருவாக்கியுள்ளார் இயக்குனர் குமரன்.

மதிப்பீடு செய்க