மாநில கூடைப்பந்து
சுங்க இலாகா சாம்பியன்
Chennai
திங்கட்கிழமை,
பெப்ரவரி 08,
12:09 PM IST
சென்னை, பிப். 8-
எஸ்.என்.ஜே. நம்பர் 1-ஆல் ஸ்டார் மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி தி.நகர் வெங்கட் நாராயணா சாலையில் உள்ள மாநகராட்சி மைதானத்தில் நடந்தது.
இறுதிப்போட்டி நேற்று இரவு நடைபெற்றது. ஆண்கள் பிரிவில் சென்னை சுங்க இலாகா-இந்தியன் வங்கி அணிகள் மோதின. மிகவும் பரபரப்பாக நடந்த இந்தப் போட்டியில் சுங்க இலாகா 75-64 என்ற புள்ளிக்கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் பெற்றது. சுங்க இலாகா அணியில் சரவணாராஜன் 15 புள்ளியும், ராமகிருஷ்ணன் 14 புள்ளியும், வினோத் 11 புள்ளியும், இந்தியன் வங்கி அணியில் தங்கதுரை 20 புள்ளியும், புவனேஸ்வரன் 19 புள்ளியும் எடுத்தனர்.
பெண்கள் பிரிவில் தெற்கு ரெயில்வே 55-45 என்ற புள்ளிக்கணக்கில் ஜேப்பியார் அணியை வென்று சாம்பியன் பட்டம் பெற்றது. கீத்து அன்னா ஜோஸ் 21 புள்ளியும், கோகிலா 13 புள்ளியும் (தெற்கு ரெயில்வே), டீனா, விக்டோரி தலா 15 புள்ளியும் (ஜேப்பியார்) எடுத்தனர்.
ஆண்கள் பிரிவில் சாம்பியன் பட்டம் பெற்ற சுங்க இலாகா அணிக்கு ரூ.20 ஆயிரம், 2-வது இடத்தை பிடித்த இந்தியன் வங்கிக்கு ரூ.15 ஆயிரமும், பெண்கள் பிரிவில் முதலிடம் பெற்ற தெற்கு ரெயில்வேக்கு ரூ.15 ஆயிரமும், 2-வது இடத்தை பிடித்த ஜேப்பியார் அணிக்கு ரூ.10 ஆயிரமும் பரிசாக வழங்கப்பட்டன.