இந்திய மண்ணில்
இரட்டை சதம்
அடித்தது மகிழ்ச்சி
ஹசிம்அம்லா பேட்டி
Nagpur
திங்கட்கிழமை,
பெப்ரவரி 08,
11:46 AM IST
நாக்பூர், பிப். 8-
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் தென் ஆப்பிரிக்க வீரர் ஹசிம் அம்லா இரட்டை சதம் அடித்தார். 253 ரன்கள் குவித்து அவர் ஆட்டம் இழக்காமல் இருந்தார்.
டெஸ்ட் போட்டியில் அம்லா முதல் முறையாக இரட்டை சதம் அடித்துள்ளார். இது அவருக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்து உள்ளது. இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
முதல் முறையாக இரட்டை சதம் அடித்தது மிகவும் முக்கியமானது இதை நான் மறக்கமாட்டேன். இந்திய மண்ணில் இரட்டை சதம் அடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. எனக்கு கிடைத்த நல்ல வாய்ப்பு இதுவாகும்.
இதைவிட எங்கள் அணி வலுவான நிலையில் இருப்பது தான் அதை விட முக்கியமானது. காலிஸ் ஆட்டத்தை மறுமுனையில் இருந்து பார்த்து அதற்கு ஏற்றவாறு விளையாடினேன்.
எனது ஆட்டம் மிகுந்த திருப்தியை அளிக்கிறது. ஒவ்வொரு ஜோடியுடனும் நின்று ஆடினேன். காலிசும், நானும் நிலைத்து நின்று ரன் குவித்தது தான் முக்கியமானது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஹசிம்அம்லாவின் ஆட்டத்தை 173 ரன்கள் குவித்த காலிஸ் பாராட்டியுள்ளார்.