கதை
சைக்கோ எழுத்தாளன் கதை...
 
எதையும் அனுபவித்து உணர்ந்து எழுதும் வித்தியாசமான எழுத்தாளர் ஷான்குமார். நாடெங்கும் அவர் புத்தகங்களுக்கு வரவேற்பு, விருதுகளும் குவிகிறது. வயலின் இசைக் கலைஞர் நிவேதிதாவிடம் வலியசென்று பழகுகிறார். காதலில் விழவைத்து திருமணமும் செய்து கொள்கிறார்.
 
அதன் பிறகு அதிர்ச்சியான திருப்பங்கள். மனைவியுடனான அந்தரங்க வாழ்க்கை அனுபவங்களை புத்தகமாக்குகிறார். கொடூரமாக சித்ரவதை செய்து அந்த வலிகளையும் அச்சிலேற்றுகிறார். இதற்காக அவருக்கு உயரிய விருது கிடைக்கிறது.
 
கணவன் சைக்கோக்தனத்தால் நொறுங்குகிறார் நிவேதிதா. அவரை சமாதானபடுத்த அமெரிக்கா அழைத்து போகிறார். அங்கு நிவேதிதாவின் பால்ய நண்பன் அபநய் அறிமுகமாகிறார். இருவருக்கும் கள்ளக்காதல் வரவைத்து அந்த உணர்வுகளையும் கதையாக்கும் விபரீத எண்ணம் ஷான்குமாருக்கு ஏற்படுகிறது. முடிவில் அபிநய் சாகவேண்டும், நிவேதிதா தற்கொலை செய்ய வேண்டும் என்பது போல் கதையை முடிக்க திட்டமிடுகிறார்.
 
இதன் மூலம் தற்கொலை வலியை எழுத்துக்களாக்கி தற்கொலை சாவுகளை தடுக்கப்போவதாகவும் அறிவிப்பு செய்கிறார். அதன்படி மனைவியை தூக்கில் தொங்கவிடுகிறார். நிவேதிதா தப்பினாரா என்பது குலைநடுங்கும் கிளைமாக்ஸ்...
 
பிரபல எழுத்தாளர் ஷான்குமாரை ஊரே கொண்டாடுவது... பாலமுரளி கிருஷ்ணா இசைக்குழுவில் வயலின் வாசிக்கும் நிவேதிதா மீது ஷான்குமாருக்கு காதல் பிறப்பது... நிவேதிதாவை மட்டம் தட்டி கொஞ்சம் கொஞ்சமாய் மனதில் இடம்பிடிப்பது என தெளிந்த நீராய் நகரும் கதை... இருவருக்கும் திருமணமானதும் வேறு களத்துக்கு மாறுகிறது.
 
கதையின் கதாபாத்திரங்களாக மனைவியை மாற்றும் ஷான்குமார் வக்கிரம் அதிர வைக்கிறது. நாய்களை ஏவி மனைவியை ஓட விட்டு ரசிப்பது... சருச்சிதைவு பற்றி எழுத கர்ப்பமான மனைவியை கீழே தள்ளி விடுவது சைக்கோவின் உச்சம்...
 
அமெரிக்காவில் சிறுவயது தோழன் அபிநயிடம் கணவன் கொடுமைகளை சொல்லி அழுவதும் அபிநயோ அனுதாபம் காட்டுவதற்கு பதில் தப்பாக நெருங்குவதும் அதிர்ச்சி. அப்போது ஷான்குமார் அஜராகி நான் பணம் கொடுத்து அபிநயை வாங்கி விட்டேன். என் சொல்படி அவர் நடக்கிறார் என்பது திடுக்...
 
தற்கொலை பற்றி எழுதப்போகிறேன். தூக்கிட்டுகொள் என தூக்கு கயிற்றில் ஏற்றி நிவேதிதா நாக்கு தள்ளி கண்கள் பிதுங்குவதை கூர்ந்து நோக்குகையில் ஷாக்...
 
ஷான்குமார், நிவேதிதா கேரக்டரில் வாழ்கிறார்கள்.
 
சுயரூபம் தெரிந்தும் கணவனுடன் தொடர்ந்து வசிக்கும் நிவேதிதா செயல் லாஜீக் மீறல்.
 
சைக்கோ கணவனை நிவேதிதா தற்கொலைகளை தடுக்க உயிர்விட்ட உத்தமர் போல் பாவித்து அழும் கிளைமாக்ஸ் சீன் கதையுடன் ஒட்டாமல் அன்னியப்படுகிறது.
 
திரில்லர் கதையை விறுவிறுப்பாக நகர்த்துகிறார் இயக்குனர் அபிஷேக். அடுத்தவர் கதையை தான் எழுதியதாக கோர்ட்டு போலீஸ் என பயமுறுத்தி பணம் பிடுங்கும் கஞ்சா கருப்பு வயிறு வலிக்க சிரிக்க வைக்கிறார். சிவாஜி, சரோஜா தேவி காதல் நகைச்சுவையும் கலகலப்பு, ராஜ்கிருஷ்ணா எழுதிய இக்காமெடி பகுதி பெரிய பலம். இடைவேளைக்கு பிறகும் இதை நீட்டித்து இருக்கலாம்.
 
தீபா வெங்கட் நளினி போன்றோரும் உள்ளனர். பால்.ஜே.இசை கதையோடு ஒன்ற செய்கிறது.
 
மதிப்பீடு செய்க