ஒரு இளைஞன் வாழ்க்கையில் ஒவ்வொரு கட்டத்திலும் தைரியத்துடன் செயல்பட்டு எவ்வாறு உயர்வடைகிறான்? என்பதை கருவாக வைத்து, `தைரியம்' என்ற படம் தயாராகி வருகிறது.
இதில், கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார், குமரன். கார்த்திகா, தீபு ஆகிய இருவருமே கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். இரண்டு பேரும் போட்டிபோட்டு கவர்ச்சி விருந்து அளிக்கிறார்கள்.
கதைப்படி, கதாநாயகன், `ஜிம்' வைத்து நடத்துகிறான். அவனுக்கு 4 நண்பர்கள். அதில், கார்த்திகாவும் ஒருவர். கார்த்திகாவுக்கு ஆபத்து ஏற்பட்டபோது, காப்பாற்றுகிறார் கதாநாயகன் குமரன். அந்த முயற்சியின்போது, ரியாஸ்கான் பலமாக தாக்கப்பட்டு கோமா நிலைக்கு தள்ளப்படுகிறார்.
இது தெரியாமல், ரியாஸ்கானின் தங்கை தீபு, குமரனை காதலிக்கிறார். இவர்களின் காதல், திருமணம் வரை செல்லும்போது, ரியாஸ்கானுக்கு நினைவு திரும்புகிறது. தன்னை தாக்கியது யார்? என்ற உண்மை தெரிந்த அவர் என்ன முடிவு எடுக்கிறார்? குமரன்-தீபு காதல் நிறைவேறியதா? என்பது, படத்தின் உச்சக்கட்ட காட்சி.
எம்.சரோஜ்குமார் கதை, திரைக்கதை, வசனம் எழுதி டைரக்டு செய்யும் இந்த படத்தை, ஆர்.பி.கிரியேஷன்ஸ் தயாரிக்கிறது.