இந்தியாவின் No.1 மாலை நாளிதழ்
MAALAI MALAR
சென்னை 20-03-2010 (சனிக்கிழமை)
Register
|
LogIn
Sign Out
|
1 M18
செய்திகள்
உலகச்செய்திகள்
தேசியச்செய்திகள்
மாநிலச்செய்திகள்
விளையாட்டுச்செய்திகள்
மாவட்டச்செய்திகள்
1 M225
பட்ஜட்
இரயில்வே பட்ஜட்
பொது பட்ஜட்
1 M2
சினிமா
டாப் 10
விமர்சனம்
முன்னோட்டம்
செய்திகள்
பேட்டி
கிசுகிசு
நட்சத்திரப் பக்கம்
காட்சியகம்
சினி வரலாறு
1 M26
மகளிர் மட்டும்
அழகு
சமையல்
கோலங்கள்
மருத்துவம்
கதம்பம்
குழந்தைகள் பெயர்
1 M5
ஜோதிடம்
ராசி பலன்
1 M135
கலைமலர்
கவியரங்கம்
சிறுகதை
ஜோக்ஸ்
1 M10
காலச் சுவடுகள்
1 M122
காட்சியகம்
1 M6
மணப்பந்தல்
1 M161
E-Paper
1 M12
Classifieds
தலைவாசல்
>>
சினிமா
>>
விமர்சனம்
Maalaimalar
Google
முத்திரை
புதன்கிழமை,
ஜூன் 24,
5:41 PM IST
திரை வகை :
காதல்
புகைப்படம்
திரைப்படம்
அரசியல் கொலை சதியை கண்டுபிடிக்கும் திருடர்கள் கதை...
கிராமத்தில் சிறு திருட்டுகள் செய்யும் நிதின்சத்யா பட்டணம் வருகிறார். அங்கு பாஸ்போர்ட்டுகளை திருடி விற்று பணமாக்கும் டேனியல் பாலாஜி நட்பு கிடைக்கிறது. இருவரும் இணைந்து கொள்ளையில் ஈடுபடுகிறார்கள்.
முதல்வர் சரவணன் பதவிச்சண்டையில் கொல்லப்படுகிறார். கொலையாளியை பிடிக்க போலீஸ் கமிஷனர் கிஷோர் துப்பறிகிறார்.
கொலைக்கான ஆதாரங்கள் வைத்திருப்பவனை போலீஸ் கண்டுபிடிக்கிறது அவன் தப்பி ஓடும் போது கொலை ரகசியங்கள் அடங்கிய லேப்-டாப்பை நிதின், டேனியல் பாலாஜி காரில் போட்டுவிட்டு குண்டடிபட்டு சாகிறான். இதையடுத்து டேனியல் பாலாஜியை துரத்துகிறது போலீஸ். மறைவிடம் சென்று லேப்-டாப்பை திறந்து பார்க்கின்றனர். அதில் முதல் மந்திரி கொல்லப்பட்ட வீடியோ காட்சிகள் ஓடுகின்றன. கொலையாளியும் தெரிகிறது அதை வைத்து திருட்டு நண்பர்கள் என்ன முடிவு எடுத்தார்கள் என்பது கிளைமாக்ஸ்.
இரு திருடர்களை கதாநாயகர் அந்தஸ்தில் வைத்து ஆக்க்ஷன், காமெடி, காதல் என பல முனைகளில் கதையை விறுவிறுப்பாக நகர்த்துகிறார் இயக்குனர் ஸ்ரீநாத். கோவில் உண்டியலை திருடி ஊர் மக்கள் விரட்ட ஓடோடி போய் பஸ்சில் ஏறி தப்பும் நிதின் சத்யாவின் அறிமுகமே அமர்க்களம். டேனியல் பாலாஜி இறுக்கமாய் வருகிறார். லட்சுமிராயை பார்க்கும் போதெல்லாம் அவர் அமைதியாவது சஸ்பென்ஸ். அதற்கு காரணமான பிளாஸ் பேக் இலவச திருமண காட்சி அழுத்தமான சீன். ஊடலை விட்டு இருவரும் சேர்வது கவிதை.
நிதின் சத்யா கலகலப்பூட்டுகிறார். பெண்கள் கல்லூரிக்குள் நுழைந்து சி.பி.ஐ. அதிகாரியை மணக்க லட்சியம் வைத்துள்ள மஞ்சரி அழகில் மயங்குவதும், தன்னை சி.பி.ஐ. ஆபீசர் அறிமுகம் செய்து அவரை காதல் வலையில் விழ வைப்பதும் தமாஷ். இறுதியில் குட்டு உடையும் போது இவன் மூஞ்சை பார்த்தா சி.பி.ஐ. ஆபீசர் மாதிரியா இருக்கு என்று மஞ்சரியிடம் டேனியல் பாலாஜி நக்கலாக கேட்பது ரகளை. நிதின் சத்யாவின் அப்பாவித்தன முகமும், முழியும் கைகொடுக்கிறது.
போலீசிடம் இருந்து டேனியல், நிதின் இரு காதலிகளுடன் தப்பும் சீன்கள் பரபர.
கிளைமாக்சில் வில்லன்கள் யார்? என்ற திருப்பங்கள் அதிர வைக்கின்றன.
லட்சுமிராய் அழுகையும், அழகும் காட்டுகிறார். மஞ்சரியிடம் கவர்ச்சி சிதறல். கிஷோர் திடீர் வில்லனாவது உதறல்.
ரியாஸ்கான், பொன்வண்ணன், ஆனந்த் கேரக்டர்களும் கச்சிதமான செதுக்கல்.
சரவணன், ஆனந்தை சுட்டவர்கள் யார் என்ற சஸ்பென்ஸ்சில் வலு இல்லை. ஆரம்பரத்திலேயே வில்லன் இவர்தான் என உணர முடிவது மைனஸ்.
யுவன்சங்கர்ராஜா இசையில் பாடல்கள் சுமார் ரகம். சலீம் ஒளிப்பதிவு சபாஸ் ரகம்.
மதிப்பீடு செய்க