போதை, தவறான உறவுகள் என கலாச்சார சீரழிவில் ஈடுபடும் சாப்ட்வேர் நிறுவன இளஞ்ஜோடிகளை கொல்லும் இளைஞன் கதை...
கிராமத்தில் வசிக்கும் கூலித்தொழிலாளி மூணார் ரமேஷ் மகன் விஜீத். சிறு வயதில் தாயின் தப்பான நடத்தையையும் அவளை தந்தை கொல்வதையும் பார்த்து மனம் சிதைகிறார்.
வளர்ந்ததும் பட்டணத்தில் என்ஜினீயரிங் படிக்க தந்தை அனுப்பி வைக்கிறார். அங்கு குடும்ப நண்பர் வீட்டில் தங்குகிறார். அந்த வீட்டிலும் பெண்கள் தவறான உறவுகளில் ஈடுபடுவதை கண்டுவெறுத்து ஓடுகிறார். ஆட்டோ ஓட்டுனராகிறார். தனது ஆட்டோவில் பயணம் செய்யும் சாப்ட்வேர் நிறுவன இளம்ஜோடிகள் செக்ஸில் அத்துமீறுவதை பார்த்து சைக்கோ மனநிலைக்கு போகிறார். அவர்களை கொன்று தீர்க்கிறார்.
இன்னொருபுறம் விஜீத் மேல் காதல் வயப்படுகிறார் ராதிகா மல்கோத்ரா இருவரும் திருமணத்துக்கு தயாராகும்போது, விஜீத்தை போலீஸ் பிடிக்கிறது. அவரை விடுவிக்க ராதிகா போராடுகிறார். விஜீத் விடுதலையானாரா? என்பது கிளைமாக்ஸ்...
விஜீத் அமைதியாக வந்து பயங்கர கொலைகள் செய்வது திடுக்... அவரை மனநோயாளியாக மாற்றும் சிறு வயது சம்பவ பிளாஷ்பேக், அதிர்ச்சி... பட்டணத்தில் ஒரே வீட்டில் நடக்கும் தகாத உறவுகள் மேற்கத்திய கலாச்சார சீரழிவின் அடையாளங்கள்.
விஜீத், ராதிகா மல்கோத்ரா காதல் அழுத்தம். வலுவில்லாத திரைக்கதை வேகத்தடையிடுகிறது. சாட்சிகளையும் கதாபாத்திரங்களையும் இன்னும் கச்சிதமாக செதுக்கி இருக்கலாம்.
பரந்தாமன் இயக்கத்தில் கங்கை அமரன் இசை பலம் சேர்க்கிறது.