சிவகங்கை மாவட்டத்தில் நடந்த ஒரு உண்மை சம்பவம் படமாகிறது
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கலவர பூமியான வீரசோழன் கிராமத்தில் நடந்த ஒரு உண்மை சம்பவம், படமாகிறது. இந்த படத்துக்கு, `வீரசோழன்' என்றே பெயர் சூட்டப்பட்டுள்ளது.
 
சாதி பிரச்சினை மிகுந்த ஒரு கிராமத்தில், வெவ்வேறு சாதிகளை சேர்ந்த 5 சிறுவர்கள் நண்பர்களாக இருக்கிறார்கள். வளர்ந்து பெரியவர்களான பின், அவர்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டு பிரிகிறார்கள். அந்த 5 நண்பர்களும் மீண்டும் எப்படி இணைகிறார்கள்? என்பதை கதை விளக்குகிறது.
 
நண்பர்களாக புதுமுகங்கள் அஜெய்குமார், ரமேஷ், பிச்சுமணி, தீனா, சிவமாறன் ஆகியோர் நடிக்க, `வள்ளுவன் வாசுகி' படத்தில் நடித்த ஸ்வேதா, கதாநாயகியாக நடிக்கிறார்.
 
டைரக்டர் ராம.நாராயணனுடன் பல படங்களில் உதவி டைரக்டராக பணிபுரிந்த அன்பு சரவணன், இந்த படத்தின் கதை-திரைக்கதை-வசனம் எழுதி, டைரக்டு செய்கிறார். ஸ்ரீமுத்துமாரியம்மன் பிலிம்ஸ் சார்பில் டி.ஜேம்ஸ், கே.தமிழ்செல்வன் ஆகிய இருவரும் இணைந்து தயாரிக்கிறார்கள். படப்பிடிப்பு அடுத்த மாதம் (ஜுன்) இறுதியில் மானாமதுரையில் தொடங்கி, மதுரை, தேனி, குற்றாலம், அம்பாசமுத்திரம் ஆகிய இடங்களில் நடைபெற இருக்கிறது.