ஒரு கல்லூரியின் கதை' படத்தை அடுத்து நந்தா பெரியசாமி டைரக்டு செய்யும் படம், `மாத்தியோசி.'
தமிழ் சினிமாவை அதிரவைக்கும் கதைக்களம் கொண்ட படம் இது.
கதையின் நாயகர்களாக ஹரீஷ், அலெக்ஸ், கோபால், விசாக் ஆகியோர் அறிமுகம் ஆகிறார்கள். கதையின் நாயகியாக ஷாம்மு நடிக்கிறார்.கதைப்படி, 4 நாயகர்களும் ஒரு கிராமத்தில் சிறு சிறு தவறுகளை செய்துகொண்டிருப்பவர்கள். ஒரு கட்டத்தில் ஊரில் மிகப்பெரிய பிரச்சினையில் சிக்கி, அங்கிருந்து தப்பித்து சென்னை வருகிறார்கள். சென்னைக்கு வந்த அந்த 4 இளைஞர்களும் என்ன ஆனார்கள்? என்பதே கதை.
கதையின் நாயகர்களாக நடிக்கும் 4 பேருக்கும் 60 நாட்கள் நடிப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. கதைநாயகி ஷாம்முவுக்கும், 4 கதைநாயகர்களுக்கும் எப்படி தொடர்பு ஏற்படுகிறது? என்பது, படத்தில் ஒரு திருப்பமாக இருக்கும்.
4 இளைஞர்களும் போலீஸ் நிலையத்தில் அடைத்து வைக்கப்பட்டு சித்ரவதை செய்யப்படும் காட்சியில், 4 பேருமே நிர்வாணமாக நடித்தார்கள். படப்பிடிப்பு மதுரை, நத்தம், கடவூர், வத்தலக்குண்டு, வத்திராயிருப்பு மலை ஆகிய இடங்களில் நடைபெற்றது. இத்துடன் 50 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்தது.
பி.எஸ்.எஸ்.ஆர். பிலிம்ஸ் சார்பில் பி.எஸ்.சேகர் ரெட்டி தயாரிக்கும் இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்பவர், விஜய் ஆம்ஸ்ட்ராங். இசையமைப்பவர், குருகல்யாண்.